அமெக்காவின் நியூ யோர்க் மாகாண ஆளுநா் மீது 4ஆவது பெண்ணொருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
அனா லிஸ் (ANA LISS) என்ற 35 வயதுப் பெண்ணே இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை ஆளுநா் அலுவலகத்தில் பணியாற்றியபோது ஆளுநா் குவோமோ (GUWAMO) தன்னிடம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டதாகவும், தேவையில்லாமல் கன்னங்களில் முத்தமிட்டு வரவேற் றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்..
ஏற்கனவே, தகாத முறையில் பேசியதாக நியூ யோர்க் ஆளுநர் மீது அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.