கனடா இந்த வார இறுதிக்குள் ஒன்பது இலட்சத்து 10ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளைப் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் மற்றும் பயோடெக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து 4இலட்சத்து 45ஆயிரம் தடுப்பூசிகளையும் மொடர்னா நிறுவனத்திடமிருந்து 4 இலட்சத்து 65ஆயிரம் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மொடார்னா நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகளை வாராந்தம் நாட்டுக்குள் வருவிப்பதற்கு ஏற்கனவே இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, கனடிய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ள ஏனைய இரு கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.