கனடிய தேசிய பாதுகாப்புச் சபையானது இராணுவத்தினுள் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு முறைப்பாடுகளை விரிவாக ஆராயும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் படைகளின் தளபதி மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும், லிபரல் கட்சியின் அதியுச்ச அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் கொண்டிருக்கும் தொடர்புகளையும் முழுமையாக ஆய்வு செய்வதற்கு கனடிய தேசிய பாதுகாப்புச் சபை திட்டமிட்டுள்ளது.
இந்த விடயத்தில் பாரபட்சமற்ற அறிக்கையொன்றை விரைவில் தயாரிக்கவுள்ளதாகவும் கனடிய தேசிய பாதுகாப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.