இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி தொடர்பாக, இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கல் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர், இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில், “தான் கர்ப்பமாக இருந்த காலங்களில் தன் மகனின் நிறம் எப்படி இருக்குமோ? என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர் என்றும், அவனுக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது என்றும் மேகன் தெரிவித்துள்ளார்.
இதனால் உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தின் மனித வளத்துறையை அணுகிய போது, நீங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று உதவ மறுத்து விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.