யாழ்ப்பாணம் – நல்லூரில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில், மக்கள் வங்கியின் கன்னாதிட்டி கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
அவர் பயணம் செய்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து, நல்லூர் – வீரமாகாளி அம்மன் வீதியில் மதிலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் தடைப்பட்டிருந்த நிலையில், வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் அதிக குருதிப்போக்கால் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய, சிறிஸ்கந்தராஜா பகீரதன், என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.