தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பலகட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக கூறியுள்ளார்.
குறிப்பாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்து விடக்கூடாது என்ற கோட்பாட்டுடனும் இடதுசாரிக் கட்சிகள் சட்டப்பேரவையில் அதிக பலம்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுமே, இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் இன்னமும் வழங்கப்படவில்லை என்றும், பாலகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.