வட மாகாணம் உள்ளிட்ட சிறிலங்காவின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி முதல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வட மாகாணம், வாழைச்சேனை, ஹபரனை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
அநுராதபுரம் புதிய நகரில் உள்ள கிரிப் (Grip) மின் உபநிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரே திடீர் மின்சாரத் தடைக்கு காரணமென சிறிலங்கா மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த திடீர் மின்தடை காரணமாக பொது மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டுள்ளனர்.
க. பொ. த சாதாரண பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மின்சாரம் தடையானது மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.