பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்டமான அணை கட்டுவதற்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது.
திபெத்தில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக பங்களாதேசில் கடலில் கலக்கிறது.
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை அமைத்து, நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சீனா செயற்படுத்த உள்ளது.
இந்த புதிய அணையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேசின் நீர் ஆதாரம் பாதிக்கப்படக் கூடும் என்று, இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்ட போதும் சீனா அதனைக் கண்டுகொள்ளவில்லை.
இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் புதிய அணை கட்டும் திட்டம் சர்வதேச பிரச்சினையாக உருவாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.