மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மன்னார் நகர மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொடருந்தில் மோதி மரணமடைந்த, மீன் சந்தையில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து, இன்று பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் பணியாற்றும் அரச ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உட்பட சுமார் 100 பேருக்கு, இன்று காலை பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.