முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியை சிறிலங்கா காவல்துறையினரால் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை, கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவில் நேற்று மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்று முல்லைத்தீவு காவல் நிலையத்துக்கு மரியசுரேஸ் ஈஸ்வரி அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.