அமெரிக்க அரசு துறைகள் மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது ரஷ்ய இணைய முடக்கிகளால் இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த 3 வாரங்களுக்குள் ரஷ்யாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் அந்த அதிகாரியை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.