அண்மையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெக்கா (Oxford-AstraZeneca) தடுப்பூசிகள் நேற்று ஒன்ராறியோவை வந்தடைந்துள்ளன.
1இலட்சத்து 94 ஆயிரம் தடுப்பு மருந்துகள் மாகாணத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த தடுப்பு மருந்தை 300 மருந்தகங்களுக்கு வழங்குகின்ற பணி இன்று தொடங்கப்படும் என்று ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் (Christine Elliott) தெரிவித்துள்ளார்.