பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக, களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் நேற்று தன்னிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லாத நிலையிலும், பேரணியில் தான் கலந்து கொள்வதை எந்த நீதிமன்ற உத்தரவும் தடுத்திராத நிலையிலும், தனது வாக்குமூலத்தை பெறுவதற்கு காவல்துறையினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை கூறி விட்டு, அவர்களின் விசாரணைக்கு உதவியாக வேண்டுமானால் வாக்குமூலம் தரலாம் என்று குறிப்பிட்டே, வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.