பிரித்தானியாவிற்கான மியன்மார் தூதர் கியாவ் ஸுவார் மின் (Kyaw Zwar Minn), இராணுவ அரசாங்கத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூசியை இராணுவ ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் ஊடாகவே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் என தெரிவிதுள்ள அவர், ஐக்கிய நாடுகள் சபைக்கான மியன்மார் தூதரின் கருத்துகளையும் ஆதரித்துள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் (Dominic Raab), மியன்மார் தூதரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.