நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனது அலுவகம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்திருந்தது என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஹவுஸ் ஒப் கொமன்ஸ் பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் தனிப்பட்ட முறையில் இராணுவ அதிகாரியின் விவகாரத்தினை தெரிவிக்கும் வரையில் அது பகிரங்கப்படுத்தப்படாத விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்னாள் இராணுவ அதிகாரியின் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்துவதில் அரசியல் நிகழ்ச்சி நிரல் காணப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





