தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர், மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற போது, அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் மம்தா பானர்ஜிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பிரசாரத்தை முடித்து வாகனத்தில் ஏற முயன்ற போது 4, 5 பேர் தன்னை கீழே பிடித்து தள்ளி எட்டி உதைத்தனர் என்றும், இதில் காலில் காயம் ஏற்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்