கொரோனா வைரஸ் பரவலின் ஓராண்டு நிறைவை நினைவு கூரும் நாளாக நாளை மறுதினம் உலகளவில் பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவிலும் இந்நாளை தேசிய ரீதியில் நினைவு கூருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடினமான நாளில் தமது அன்புக்குரியவர்களை நினைவு கூர வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 22ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் அன்புக்குரியவர்கள் இந்த நாளில் நினைவு கூர்ந்து தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.