அமெரிக்க நாடாளுமன்ற கட்டடமான கப்பிட்டலின் பாதுகாப்புக்காக, வொஷிங்டனில் சுமார் 2 ஆயிரத்து 300 தேசிய காவல்படையினரை வைத்திருப்பதற்கு, பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது, , 5 ஆயிரத்து 200 தேசிய காவல்படையினர் நிறுத்தப்பட்டு, கப்பிட்டலுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையிலேயே, பாதுகாப்பு நிலைமைகள் மறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அங்கு 2 ஆயிரத்து 300 தேசிய காவல்படையினரை அடுத்த இரண்டு மாதங்களுக்கு பாதுகாப்புக்காக நிறுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் மீது ஜனவரி 6 ஆம் நாள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, தேசிய காவல்படை வீரர்கள் கப்பிட்டல் வளாகத்தில், உயரமான பாதுகாப்பு வேலி அமைத்து காவலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.