உள்ளுர் அமைப்புக்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீன ஹக்கர்களால் குறிவைக்கப்பட்டுள்ளன.
இது ‘வழக்கத்திற்கு மாறாக ஆக்கிரமிப்பாக காணப்படுவதோடு பாரிய அளவிலான ‘சீன இணைய உளவு பிரசாரம்’ என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கணினி பாதுகாப்பு நிபுணர் பிரையன் கிரெப்ஸ் (Brian Krebs) தெரிவித்தார்.
அதேநேரம் மைக்ரோசொப்ட் நிறுவனமானது பாதிப்புகளுக்கான இணைப்புகளை வெளியிட்ட பின்னர், பாதுகாப்புத் திருத்தங்களுடன் இதுவரை புதுப்பிக்கப்படாத சேவையகங்களில் தாக்குதல்களை தடுப்பதற்கு ‘வியத்தகு முறையிலான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ என்று கிரெப்ஸ் (Krebs) கூறினார்.
மைக்ரோசொப்ட் பரிமாற்று மென்பொருளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை ஹக்கர்கள் அறிந்து கொண்டு மின்னஞ்சல்களை திருடி, கணினி சேவையகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கணினி பாதுகாப்பு நிபுணர் இணைய பாதுகாப்பு செய்தி இணையதளத்தின் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.