தமிழக சட்டமன்றத் தேர்தலில், போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்கட்டமாக 70 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமது கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று வெளியிட்டுள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பணியாற்றிய பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையில் சினேகா மோகன்தாஸ், பல்லாவரம் செந்தில் ஆறுமுகம், தாம்பரத்தில் சிவ. இளங்கோ உள்ளிட்டோர் இந்தக் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.