நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு சிறிலங்காவின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்த ஆவணங்களை அடுத்து, தமிழ் மக்கள் கூட்டணியை அரசியல் கட்சியாக பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பித்திருந்தார்.
எனினும், அந்தக் கட்சி பதிவு செய்யப்படாமல் இருந்த நிலையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பதிவுகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.