ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் ஐரோப்பிய விசாரணைகள் குறித்து கனேடிய சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இரத்தக்கட்டிகளை இந்த தடுப்பூசிகள் ஏற்படுத்துவதாக வெளியான தகவல்களை அடுத்து இந்ததடுப்பூசியின் பாவனையை கனடிய அரசாங்கம் தற்காலிகமாக வெகுவாகக் குறைத்துள்ளது.
அதேநேரம், ஐரோப்பாவில் இந்த தடுப்பூசி சம்பந்தமான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த வாரத்திலிருந்து இவ்வகை கொரோனா தடுப்பூசியை கனடாவில் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.