ஒன்ராரியோவில் கொரோனா தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலைமைகளின் பிரகாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை காணப்படுமாயின் ஏப்ரல் மாதமளவில் நாளொன்றுக்கான தொற்றானர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தினை அண்மிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் அது மிக மோசமான நிலைமையாக அமைந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




