தமிழக சட்டசபை தேர்தலில் தி.முக. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒப்பந்தம், கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இவற்றில், கோவை தெற்கு, விளவங்கோடு, உதகை, வேளச்சேரி, காரைக்குடி, ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே நேரடி போட்டி நடக்கவுள்ளது.
மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரசும், பா.ஜ.கவும், நேரடியாக மோதவுள்ளன.
இவை தவிர, பொன்னேரி , ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை,ஓமலூர், ஈரோடு கிழக்கு, விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி , உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, அறந்தாங்கி, திருவாடனை, மேலூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், கிள்ளியூர், உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.