கனடாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வு இன்றையதினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தேசிய நாளாக மார்ச் 11ஆம் திகதியை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ முன்னதாக அறிவிப்பு விடுத்திருந்தார்.
அதற்கு அமைவாக, கொரோனா தொற்றுக்கு இலக்காக உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்குமான அஞ்சலி நிகழ்வு நடைபெறுகின்றது.
அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிய முன்களப்பணியாளர்கள் மற்றும் ஏனைய சுகாதார துறையினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றிகளையும் அவர்களின் அளப்பரிய சேவைக்கான அங்கீகாரத்தை வழங்கும் வகையிலான பிரதிபலிப்புக்களையும் செய்யுமாறு சமஷ்டி அரசாங்கம் கோரியுள்ளது.