கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்கா கி மரணமடைந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.
பொதுமக்களும் தமது அன்புக்குரியவர்களை வீடுகளில் இருந்தவாறே நினைவு கூர்ந்தனர்.
கொரோனா தொற்று உலகளவில் அதிகளவாக பரவ ஆரம்பித்த நாளாக மார்ச் 11ஆம் திகதியை மையப்படுத்தி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேசிய நாள் என்று சமஷ்டி அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனமும் இந்நாளை, கொரோனா தொற்று பரவலடைந்து ஓராண்டு நிறைவடையும் தினமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.