பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு ஜப்பானில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் நடந்த நினைவு விழாவில் பேரரசர் நரு ஹிட்டோ (Naru Hito) மற்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suka) ஆகியோர் நினைவிடத்தில் இணைந்தனர்.
நகரின் தேசிய அரங்கில் பேசிய பேரரசர் நருஹிட்டோ(Naru Hito), “சோகத்தின் மறக்க முடியாத நினைவு” ஒரு தசாப்த காலமாக நீடித்தது என்றார்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர், அவர்கள் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு பெரும் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஏராளமான கஷ்டங்களை வென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
2011 மார்ச் 11 அன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.