மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிற்றியில் நடந்த வன்முறைகளில் 80 பெண்கள் காயமடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போதே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மாளிகையை நெருங்கிய போராட்டக்காரர்கள் இரும்பு தடுப்புகளை தகர்த்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்ற போது, பெண் காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில், காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்களும், பதிலுக்கு காவல்துறையினரை தாக்கியுள்ளனர்.
இந்த மோதல்களில் பெண் காவல்துறை அதிகாரிகள் 62 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 19 பெண்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.