சிறிலங்காவில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இன்று இதுவரை 300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்திலும் 6 பேர் வவுனியா மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டடார்.
யாழ். மாவட்டத்தில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவைச் சேர்ந்த 3 பேரும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூவருக்கும் யாழ். நகரில் கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.





