சர்வதேச நீதி கோரி அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 16 ஆவது நாளை அடைந்துள்ள நிலையில் அவரது வீட்டினின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பிகையின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவரை காப்பாற்று என்று கிளரர்ந்தெழுந்த தமிழர்களை அடக்குவதற்கு பெருமளவிலான பிரித்தானிய காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையிருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை தமிழினத்துக்கு சர்வதேச நீதி கோரி, ஆகாரம் உண்ணமறுத்த அம்பிகை செல்வக்குமாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
மருத்துவர்கள் இனியும் தாமதிக்கவேண்டாம் விரைந்து விரைந்து காப்பாற்றியாகவேண்டும் என அறிவுறுத்தியுள்ள போதிலும் தனது உறுதிப்பாட்டில் நிலையாக உள்ள அம்பிகை உண்ண மறுத்துள்ளதால் போராட்டக்களம் பரபரப்படைந்துள்ளது.
இதேவேளை பிரித்தானிய அரசிடம் அம்பிகை முன்வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டுமென கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்கள் பெரும் திரளாக எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.