வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோர் தனிமைப்படுத்தப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படும் காலம் 7 நாட்களாக குறைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இன்று முடிவு செய்வார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று சுகாதார அமைச்சில் நடைபெறும் கொரோனா தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்கள், விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் போது, எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்தில் கொண்டே, தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்குமாறு சுகாதார அமைச்சிடம் தாம் கோரியிருப்பதாகவும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.