சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வரும் பிரித்தானியாவின் செயல், நட்புரிமையற்றது என்று, சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு, சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளது.
இந்த வரைவில் அடங்கியிருக்கும் விடயங்கள், சிறிலங்காவின் இறைமையை மீறும் வகையில், தலையீடு செய்கின்ற வகையில் அமைந்துள்ளன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் என்ற அடிப்படையில், சிறிலங்காவுக்கு எதிராக பிரித்தானியா மேற்கொள்ளும் இந்த செயல், நட்புரிமையற்றது என்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.