ரொரண்டோவில் எதிர்வரும் புதன்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக மேயர் ஜோன் டொரி (JHON TORY) தெரிவித்துள்ளார்.
அத்துடன் திட்டமிடப்பட்டமைக்கு அமைவாக 80வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரொரண்டோவில் 27 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தும் பணியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ரொரண்டோவின் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வருமென்று நம்புவதாகவும் கூறினார்.




