பெரும் பாதுகாப்பிற்கு மத்தியில் மத்திய ஆபிரிக்க குடியரசில் இரண்டாவது சுற்று நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று வருகின்றது.
தலைநகர் பாங்குய்யில் சற்று தாமதமாக வாக்களிப்பு தொடங்கி சுமூகமாக இடம்பெற்று வருவதாக தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் வாக்களிப்பு நிலையங்களை சுற்றி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து இம்முறை அதிகளவிலான படையினரும் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் டிசம்பர் மாதம் தடைபட்ட 49 தேர்தல் மாவட்டங்களில் மீண்டும் தேர்தல் இடம்பெற்று வருகின்றது.