ஐநா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இத்தாலியில் உள்ள சிங்களவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இத்தாலியின் மிலானோ நகர புகையிரத நிலையத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா வின் உள்ளக விடயங்களில் தலையிடக் கூடாது என்றும் ஐநா ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலைமையிலும், அதிகமான சிங்களவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.