ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் அம்மையாரை கொழும்பு வருமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரின் நிறைவில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
சிறிலங்கா தொடர்பான காட்டமான அறிக்கையை பச்லெட் அம்மையார் வெளியிட்ட பின்னர், அவரை கொழும்புக்கு அழைப்பது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்படுவது குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினால் ஆராயப்பட்டுள்ளது என்பதை சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், இதுகுறித்து இன்னமும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.