ஒன்ராறியோவில் சிறிய ரக விமானம் ஒன்று சிம்கோ (Simcoe) ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரிலியாவுக்கு (Orillia) கிழக்கே நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏரியின் கரையில் இருந்து இரண்டரை கிலோ மீற்றர் தொலைவில், விமானத்தில் சிதைவுகள் கிடப்பதாக ரமரா தீயணைப்பு சேவை பிரதி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேறெவரும் காயமடைந்தனரா என்பது பற்றிய எந்த தகவரும் கிடைக்காத நிலையில், ஒன்ராரியோ மாகாண காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.