நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் 21ம் திகதி வரை ஒரு வாரகாலத்திற்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா அதிகரித்து வரும் பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவு அமுலான நிலையில், அனைத்து வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளன.
எனினும், ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளான காய்கறி, பழம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையம், மருந்தகங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியே வராமல் கூடியவரை தவிர்த்திருந்ததாலும், வாகன போக்குவரத்து முடங்கியதாலும், அங்கு வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.