நோட்டா எனப்படும், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்குகள் அதிகளவில் கிடைத்தால், தேர்தல் முடிவை ரத்துச் செய்யக் கோரும் மனு மீது, உச்சநீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்குகள் அதிகளவில் கிடைத்தால், அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஒரு தொகுதியில் வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி பாஜகவைச் சேர்ந்த சட்டவாளர் குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறு தேர்தலின் போது ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.