ஒன்ராறியோவில் மதவழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து மத தலைவர்கள் வரைவேற்புத் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் இன்று தொடக்கம், கொரோனா கட்டுப்பாடுகள் பல தளர்த்தப்படுகின்றன.
இதற்கமைய, திருமணங்கள், இறுதிச்சடங்னுகள், மத நிகழ்வுகளில் கூடுதலானோர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னர், முடக்கப்பட்ட பகுதிகளில் 10இற்கும் அதிகமானோர் இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தொடக்கம், நிகழ்வுகளில் உள்ளக அரங்கில் 15 வீத இருக்கைகளின் அளவுக்கேற்பவும், வெளிப்புற நிகழ்வுகளில் 50 பேர் வரை பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக டக் போர்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை மத தலைவர்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.