கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில், நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மேலும் குவாலியர், உள்ளிட்ட எட்டு நகரங்களிலும், இரவு ஊரடங்கு உத்தரவு போன்ற சூழ்நிலையில் இருக்கும் எனவும், சந்தைகள் இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றுநோயை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், முககவசம் அணிந்து அனைத்து விதிகளையும் பின்பற்றுமாறும், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.