தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார் என்று, ஏபிபி – சி வோட்டர்ஸ் (APP – C voters) இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் திமுக., கூட்டணி 43 சதவீத வாக்குகளுடன் 161 தொடக்கம் 169 இடங்களில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53 தொடக்கம் 61 இடங்களில் வெற்றிபெறும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி 7 சதவீத வாக்குகளுடன். 2 தொடக்கம் 6 தொகுதிகளையும், அமமுக 6.4 சதவீத வாக்குகளுடன் ஒன்று தொடக்கம் 5 தொகுதிகளையும், ஏனைய கட்சிகள் 12.3 சதவீத வாக்குகளுடன் 3 தொடக்கம் 7 வரையான தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தமிழக முதல்வராக வர வேண்டும் என 40 சதவீதம் பேரும், பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டுமென 29.7 சதவீதம் பேரும் விரும்பம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், 77 தொடக்கம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்று, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.