ஸ்காபரோவில் நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
Finch Avenue கிழக்கில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞன் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் இருவருக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கு தெளிவான காரணம் இன்னமும் தெரியவில்லை.