முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொக்குத்தொடுவாயில் இருந்து அளம்பில் நோக்கி பயணித்த உந்துருளி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து நாயாறு பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்,
அளம்பில் – தங்கபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இராசன் மோகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலும், 56 வயதுடைய கோபால் புஸ்பராசா என்ற குடும்பத் தலைவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.