கொரோனாவின் 2வது அலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி,
“நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களும் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டு கொண்டாலும் கவனமாக இருத்தல் அவசியம். முக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.