மொன்றியல் (Montreal) தெற்கில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கியூபெக் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கிடைத்த அழைப்பை அடுத்து நேற்றுக்காலை அங்கு சென்ற மொன்றியல் மாநகர காவல்துறையினால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், குழந்தை இறந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எநதச் சூழ்நிலையில் குழந்தை இறந்த்து என்று மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மரணத்தில் ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது இப்போது கூற முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.