பா.ஜ.க.வின் மக்களவை உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
62 வயதான ராம் ஸ்வரூப் சர்மா, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
அவர் டெல்லியின் ஆர்.எம்.எல். மருத்துவமனை அருகே உள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் மின்விசிறியில் அவரது தூக்கில் தொங்கிய நிலையில் அவர் அயலவர்களால் கண்டறியப்பட்டார்.
தகவலறிந்து விரைந்து காவல்துறையினர் அவரது உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.