வெளிநாட்டு உதவிகள் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மாற்றியமைத்துள்ளதாக கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் (Erin O’Toole) தெரிவித்துள்ளார்.
உள்நாட்டின் நிதியை மேம்படுத்தவும், சிறந்த முறையில் பராமரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச மெய்நிகர் நிகழ்வொன்றில் வெளிநாட்டு உதவித்திட்டங்கள் தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேநேரம், வெளிநாட்டு உதவிகளை வழங்கும் முகவர் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.