ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, சிறிலங்காவை ஆதரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா சிறிலங்காவுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது என்று, ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளதாக சிறிலங்கா தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் கீச்சகப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வல்லரசாக இருக்கும் இந்தியாவை, ஜயநாத் கொலம்பகே பெரிதும் பாராட்டியுள்ளதாகவும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விடயத்தின் இந்தியாவின் தீர்மானம் தொடர்பாக இதுவரையில் அந்நாட்டு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





