கொங்கோவின் கிழக்கில் உள்ள இதுரி (Ituri ) மாகாணத்தில் இடம்பெற்ற மோதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கோ ஜனநாயக குடியரசு இராணுவத்துக்கும், தீவிரவாதக் குழுவுக்கும் இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்றதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில் 11 பொதுமக்களும், இரண்டு படைவீரர்களும், காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறியுள்ளது.
அத்துடன், இராணுவத்தின் தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.